search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகம் கடிதம்"

    மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரைவாக அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார். #MekedatuDam #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.5,912 கோடியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து அனுமதி வழங்கக்கோரி மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. அதன் மீது மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை. இந்த திட்டத்திற்கு தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    பெங்களூரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவது, 400 மெகாவாட் மின்உற்பத்தி செய்வது, காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீரை வழங்குவது ஆகியவை தான் புதிய அணையின் நோக்கம். இரு மாநிலங்களும் நீர் ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு இல்லாமல் காவிரி ஆற்றில் நீர்மின் உற்பத்தி திட்டங்களை அமல்படுத்திக்கொள்ள காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்திற்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய தண்ணீர் அளவில் எந்த பாதிப்பும் இருக்காது. மழை நன்றாக பெய்யும் ஆண்டுகளில் தமிழகத்திற்கு மாதந்தோறும் தண்ணீர் திறந்துவிடுவதில் எந்த பிரச்சினையும் இருக்காது. எனவே புதிய அணை கட்டுவதற்கான அனுமதியை விரைவாக வழங்க வேண்டும். இந்த பிரச்சினையை தீர்க்கும் நோக்கத்தில் இரு மாநில முதல்-மந்திரிகள் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.



    மத்திய மந்திரி நிதின் கட்காரியை முன்னாள் பிரதமர் தேவேகவுடா நேற்று முன்தினம் டெல்லியில் நேரில் சந்தித்து, மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கைவிடுத்தார்.

    அதற்கு நிதின் கட்காரி, தமிழக அரசுடன் பேசி இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.  #MekedatuDam #Kumaraswamy

    ×